சிறு குழந்தைகளுக்கு இரவில் இருமல் வருவதற்கான காரணங்கள் என்ன? அறிவோம்! தடுப்போம்!

  • SHARE
  • FOLLOW
சிறு குழந்தைகளுக்கு இரவில் இருமல் வருவதற்கான காரணங்கள் என்ன? அறிவோம்! தடுப்போம்!

குழந்தைகளின் தொடர் இருமலுக்கான காரணங்களை இப்பதிவின் மூலம் படித்தறிவோம் வாருங்கள்.

சிறு குழந்தைகள் இரவில் இருமும்போது நிலை தடுமாறுவது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் தான்.தங்கள் குழந்தைகள் இருமும்போது செய்வதரியாமல் கவலைக்குள்ளாகும் பெற்றோர்கள் ஏராளம்.ஆனால் குழந்தைகள், ஏன் இரவில் தொடர்ந்து இருமுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை யோசியுங்கள். பொதுவான காரணங்களைத் தவிர, சில தீவிர காரணங்களாலும் உங்கள் குழந்தைக்கு இரவில் இருமல் ஏற்படலாம். சிறு குழந்தைகளுக்கு இரவில் இருமல் ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சிறு குழந்தைகளுக்கு இரவில் இருமல் வருவதற்கான காரணங்கள் என்ன?

தொற்று

சிறு குழந்தைகளுக்கு இரவில் ஏற்படும் இருமல் பிரச்சனைக்குத் தொற்றும் ஒரு காரணமாக இருக்கலாம்.இது தவிர, அதிகரித்து வரும் சளி, காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு இரவில் அதிக இருமல் ஏற்படுகிறது. சில நேரங்களில், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கடுமையான, வறட்டு இருமல் ஏற்படலாம் இந்தப் பிரச்சனை இரவில் அதிகரிக்கக்கூடும். இந்த வைரஸ் தொற்றுகளைத் தவிர்க்கக் குழந்தைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, ஆனால் இந்த மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி கொடுக்கக் கூடாது.

ஆசிட் ரிஃப்ளக்ஸ்

சிறு குழந்தைகளுக்கு இரவில் ஏற்படும் இருமலுக்கு, ஆசிட் ரிஃப்ளக்ஸ் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில், குழந்தைகளுக்கு இருமலுடன் அடிக்கடி வாந்தி, வாய் கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் எழுகின்றன. பொறிக்கப்பட்ட உணவுகள், கஃபீன், குளிர் பானங்கள் போன்ற உணவுகளை உங்கள் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலம் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரவில் அதிகப்படியான இருமல் இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு இருமலுடன், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதன் காரணத்தைப் பொறுத்தது ஆஸ்துமாவிற்கான சிகிச்சை அளிக்கப்படும். குழந்தைகளை மாசு மற்றும் புகையிலிருந்து விலக்கி வையுங்கள்.

அலர்ஜி அல்லது சைனஸ்

குழந்தைகளுக்கு அல்ர்ஜி காரணமாகவும், இரவில் தொடர்ந்து இருமல் ஏற்படலாம்.இது தவிர, தொண்டை அரிப்பு, மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல், தொண்டை புண் அல்லது வலி போன்ற பிரச்சனைகளும் அலர்ஜியின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கக்குவான் இருமல்

கக்குவான் இருமலால் (whooping Cough) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரவில் அதிகப்படியான இருமல் இருக்கும். இந்தச் சூழ்நிலையில், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இந்த காரணங்கள் தவிர, இரவில் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு வேறுபல காரணங்களும் இருக்கலாம்.
அழுக்கு பொம்மை, சிகரெட் அல்லது புகை மாசு போன்ற சூழல்களுடன் தொடர்புடைய குழந்தைகளுக்கு இரவில் இருமல் ஏற்படலாம்.

Images credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்