High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

Newborn Weight: குழந்தை பிறந்த உடன் உடல் எடையைக் கணக்கிடுவது பிறப்பு எடை எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு குழந்தைகள் சரியான அளவிலான எடையுடன் பிறக்கும். சில குழந்தைகள் உடல் எடை அதிகமாகவும், சில குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் பிறக்கிறது. குழந்தையின் உடல் எடை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பின் இது ஆபத்தையே விளைவிக்கிறது. குழந்தை அதிக உடல் எடையுடன் பிறப்பதற்கான சில காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பிறக்கும் போது அதிக உடல் எடை

கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் எடை அதிகரிக்கும் போது, அது குழந்தைகளுக்கான எடையையும் அதிகரிக்கிறது. மேலும், மரபணு சார்ந்த பிரச்சனைகளும் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும். இது போன்ற ஏராளமான காரணங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கிறது. பொதுவாக குழந்தைக்கு சராசரியாக இவ்வளவு எடை தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உல்ளது. ஆனால் இது ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விகிதத்தில் மாறுபடும். இதில் பெண் குழந்தைக்கான சராசரி உடல் எடை 3.2 கிலோ எடையாகவும், ஆண் குழந்தையின் சராசரி உடல் எடை 3.3 கிலோ எடையாகவும் இருக்க வேண்டும்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்