துத்தநாகம் குறைபாட்டைப் போக்கி, உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.
துத்தநாகம் நிறைந்த உணவுகள்: குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, சமசீரான உணவைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இரும்பு, கால்சியம் மற்றும் புரதத்துடன் துத்தநாகம் சத்துக்களும் தேவைப்படுகின்றன. குழந்தைகளுக்கு சரியான அளவு துத்தநாகம் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தலாம். மேலும், அவர்களின் நினைவாற்றலும் கூர்மையாகிறது. துத்தநாகம் குறைபாடு, குழந்தைகளுக்கு எரிச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான துத்தநாகம் ஐ அவர்களின் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். பல வகையான உணவுகளில் துத்தநாகம் காணப்படுகிறது. இந்த உணவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
முட்டை
முட்டையில் நிறைந்துள்ள புரதம், கால்சியம், வைட்டமின் A மற்றும் துத்தநாகம் உடலுக்கு அதிக நன்மைகள் தரும். குழந்தைகளுக்குத் தினமும் முட்டை கொடுப்பதன் மூலம் துத்தநாகம் குறைபாட்டைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.
வேர்க்கடலை
வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுப்பதற்கு பதிலாக, சத்துக்கள் நிறைந்த கடலை மிட்டாய் கொடுக்கலாம். வேர்க்கடலை சாப்பிடுவது, குழந்தைகளின் செரிமான மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. மேலும், அவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்படவும் உதவுகிறது.
பீன்ஸ்
குழந்தைகளின் உடலில் உள்ள துத்தநாகம் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய, அவர்களுக்கு பீன்ஸ் கொடுக்கலாம். கால்சியம், நார்ச்சத்து, சோடியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ள பீன்ஸ், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் சாப்பிடுவது, வலுவான எலும்புகள் மற்றும் ஆரோக்கியமான கண்களுக்கு வழிவகுக்கிறது.
எள்ளு
இது வெப்ப தன்மை உடையது. குளிர்காலத்தில் எள்ளு சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும். இது குளிர்காலத்தில் உடல் வெப்பத்தை தக்க வைத்து, பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. எள்ளில் கால்சியம், புரதம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இதைச் சாப்பிடுவதால், எலும்புகள் வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
முந்திரி
முந்திரி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முந்திரியில் புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் C போன்றவை நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு முந்திரியை கொடுப்பதன் மூலம், எலும்புகள் வலுவடைவதோடு, அவர்களின் செரிமான அமைப்பும் வலுவாக இருக்கும்.
இந்த உணவுகள் குழந்தைகளின் உடலில் துத்தநாகம் குறைபாட்டைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு, இந்த உணவுகளைக் குறைந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அல்லது அல்ர்ஜி இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே இந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
Images Credit: Freepik