Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்

  • SHARE
  • FOLLOW
Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்

Meditation Health Benefits: அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தே ஒருவரது உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் காணப்படும். ஓய்வு இல்லாத வேலை, நெருக்கடியான சூழல் போன்றவை மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுமுறைகள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தினமும் தியானம் செய்வதன் மூலம் இந்த இரண்டையும் குணப்படுத்தலாம். தியானம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தரும்.

தியானம் செய்வதன் விளைவுகள்

தியானம் மனதை தளர்வாக்கி, பல பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. குறிப்பாக மன அமைதியுடன் இருப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தியானத்தின் முக்கிய நன்மை மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். இதை அறிந்த பலரும், தியானத்தில் ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் போது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரிக்கலாம். இதனால், மனச்சோர்வு, மன அழுத்தம், தூக்கக் கலக்கம், இரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுகிறது.

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

தியானம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இப்போது தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

நினைவாற்றல் மேம்பாடு

தியானம் செய்வதால் மனம் அமைதி அடைவதுடன், நினைவாற்றலை மேம்படுத்தும். ஆனால் இது ஒரே நாளில் செய்வதால் மட்டும் நடக்காது. இதனை தினசரி வழக்கமாக மாற்றும் வரை தொடர்ந்து பயிற்சி செய்து வர வேன்டும். இது எண்ணங்களில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்