Winter Sore Throat Remedies: கோடைக் காலத்தை விட குளிர்காலத்தில் நோய்த்தொற்றுகள் அதிகமாக பரவுகின்றன. அதிலும் குறிப்பாக ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்றவற்றால் விரைவாகப் பாதிக்கபப்டலாம். மற்ற அறிகுறிகளாக, தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல், தொண்டைப் புண் போன்றவை மிகவும் எரிச்சலூட்டும் அறிகுறிகளாகும். இவை அனைத்துமே அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் காரணிகளாகவே அமைகின்றன. இதில் வைரஸ் தொற்று உடலில் நுழைந்து நோயெதிர்ப்பு அமைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான அறிகுறியாகவே தொண்டை புண் ஏற்படுகிறது. இந்த வலியிலிருந்து விடுபட சில நாள்கள் ஆகலாம். இவற்றை சில இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.
தொண்டை வலி குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்
மிகவும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் தொண்டை வலி குணமாக சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி தொண்டை வலியை விரைவாகக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cough Home Remedies: நெஞ்சு சளியை கரைக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துதல்
இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும் வரயிலான காலம் ஆரோக்கியம் சார்ந்ததாகும். எனினும், இந்த காலமே தொண்ட வலிக்கான சாத்தியமான தூண்டுதலாகிறது. இதில் வறண்ட காற்றுக்கு உணர்திறன் இருப்பின், சுற்றுச்சூழலை ஈரப்பதமாக வைக்க ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். இது தொண்டை வலியைக் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவது நல்ல தூக்கத்தை தருகிறது.

உப்பு நீர் கொப்பளிப்பு
தொண்டை வலிக்கு மிகச்சிறந்த தீர்வாக தொண்டை கார்க்லிங் உதவுகிறது. இது எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து அதனைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் தொற்றுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை வாயிலிருந்து அகற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Best Home Remedies: வீட்டில் செய்யக் கூடிய கசாயங்களும், நன்மைகளும்
சூடான நீரில் எலுமிச்சைச் சாறு
எலுமிச்சையை சரியான முறையில் எடுத்துக் கொள்வது தொண்டைப் புண்களைக் குணமாக்கும். எலுமிச்சையில் அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. மேலும் எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிவைரல் தன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் படி, எலுமிச்சைச் சாற்றினை சூடான நீரில் சேர்த்து அருந்தலாம். இதன் மூலம் தொண்டைப் புண் அறிகுறிகளைக் குறைக்க பாக்டீரியா மற்றும் வைரஸை அகற்றலாம்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற விதமாக, கண்டிப்பாக எலும்பு குழம்பு உட்கொள்ளலாம். எலும்பில் அதிக அளவிலான மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இவை நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன. தொண்டைப் புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணி தொற்று உள்நுழைவதாகும். இவற்றிலிருந்து விடுபட எலும்பு குழம்பு நுகர்வு பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!
கெமோமில் டீ
சீமை சாமந்தி என்ற கெமோமில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இந்த கெமோமில் டீ அருந்துவது மனநிலையை மேம்படுத்துவதுடன், குளிர்கால பிரச்சனையின் அறிகுறிகளை எளிதாக்கும். இந்த சீமை சாமந்திப் பூக்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் மற்றும் துவர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டை எரிச்சலைக் குணப்படுத்தி, தொண்டைப் புண்களுக்கு உதவுகின்றன. கெமாமில் டீயை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்வதன் மூலம் தொண்டையில் உள்ள முட்களை நீக்கலாம். தொண்டைப் புண் காரணமாக சிலருக்கு தூங்குவது கடினமாக இருக்கும். இவர்கள், ஒரு கப் கெமோமில் தேநீர் குடிப்பது நல்ல தூக்கத்தைத் தருகிறது.

தேன் அருந்துதல்
இனிப்பு சுவையான தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமாகும். இவை அரிப்பு மற்றும் வலியைக் குறைக்க வாயில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை தேன் சாப்பிடலாம். மேலும், தேனை இஞ்சி சாறுடன் கலந்து சூடாக அருந்துவதன் மூலம் சளி, இருமலைக் குணப்படுத்துவதுடன், தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Honey For Kids Cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!
Image Source: Freepik