Ways To Reduce Relationship Stress: ஒவ்வொரு உறவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும். இவை, சில நேரங்களில் குடும்பம், கணவன் அல்லது மனைவி, நண்பர்களுடனான பிரச்சனைகள் என எந்த நேரத்திலும் ஏற்படுவதாகும். இது நம் அன்றாட வாழ்வில் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, தம்பதியினரிடையே ஏற்படும் பிரச்சனைகள், விவாதிக்கப்படாத சண்டை, புறக்கணிக்கப்பட்டதாக உணர்தல், தேவைகளில் வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். உறவுகளிடையே ஏற்படும் மன அழுத்தத்தை விரைவாக சமாளித்து பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வது நன்மை தரும்.
உறவுகளில் மன அழுத்தம்
இளமைப் பருவத்தின் அன்றாட பகுதியாகவே மன அழுத்தம் அமைகிறது. ஆனால், இதை நீண்ட நாள்களுக்கு நம் மனதிலேயே வைத்திருந்தால் மன ஆரோக்கியம் கெடுவதுடன், உறவினர்களிடையே விரிசலை ஏற்படுத்தும். மேலும், இந்த மன அழுத்தத்தை விரைவில் கையாளாததால் எதிர்மறை சுழற்சியை உருவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் பிரேக் அப் மோசமாக இருந்ததா? அதில் இருந்து வெளிவர சில வழிகள் இங்கே..
உறவுகளினால் ஏற்படும் அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
பார்ட்னர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடையே ஏற்படும் மோதல்களை வழிநடத்தி சமாதானம் செய்வதுடன் மனதை சமநிலைப்படுத்துவதற்கான சில குறிப்புகளைக் காண்போம்.
எதிர்கொள்ளுதல்
உறவுகளுடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு, அதனை சந்திக்காமல் அப்படியே விட்டு விடுவது மேலும் பிரச்சனையையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கலாம். எனவே, நீங்கள் மன அழுத்தத்தைச் சந்தித்தால் சம்பந்தப்பட்ட நபருடன் சேர்ந்து உரையாடலில் ஈடுபடுங்கள். இந்த விவாதத்திற்கான காரணத்தை விளக்கி மனம் திறந்து பேசுவதன் மூலம் உங்கள் மனதில் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் மனதில் மாற்றங்கள் ஏற்படலாம்.