Newborn Baby Care In Rainy Season: பிறந்த குழந்தை பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். புதிதாக பிறந்த குழந்தைகள் மெல்லிய உணர்திறன் மிக்கதென்பதால் எளிதாக நோய்த்தொற்றுகள் தாக்கும் அபாயம் ஏற்படலாம். பொதுவாக மழைக்காலத்தில் அதிக நோய்த்தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. இந்த காலகட்டத்தில் பல்வேறு நோய்த்தொறுக்கள் மற்றும் நோய்கள் ஏற்படும். இதில் பெரியவர்களைவிட புதிதாக பிறந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம். எனவே, குழந்தைகளை மிகப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில், புதிதாக பிறந்த குழந்தைகளின் பலவீனமான நோய் எதிர்ப்புக் காரணமாக எளிதில் நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே இந்த மழைக்காலத்தில் கிருமிகள், வைரஸ்கள், கொசுக்கள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு முறைகள்
மழைக்காலத்தில் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்கென சில குறிப்புகளைக் கையாள்வது அவசியம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!
தூய்மையாக இருப்பது
தூய்மையின்மையின் காரணமாக எளிதில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படலாம். இதனால் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்கள் அனைத்தும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகளை எடுத்துச் செல்லும் பகுதிகள், குளியலறை உள்ளிட்ட போன்ற அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க தேவையில்லாமல் தண்ணீர் சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் தரையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
டயப்பர்களை அடிக்கடி மாற்றுதல்
குழந்தைகளுக்கு டயப்பர்களை மாற்றாமல் இருப்பின், சொறி, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். நீண்ட நேரம் ஈரப்பதமடைந்த டயப்பரை அணிவது எரிச்சல் மற்றும் டயபர் சொறி ஏற்படலாம். குறிப்பாக மழைக்காலத்தில் வானிலை மிகவும் ஈரப்பதமாக இருப்பதால், டயபர் சொறி மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, குழந்தையின் டயப்பரை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது நல்லது. மேலும், சில மணி நேரங்களுக்கு டயபர் இல்லாத நிலையில் குழந்தைகளை வைக்க அனுமதிக்கலாம்.
கொசுத்தடுப்பு பயன்படுத்துதல்
மழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்களாலே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் கொசுக்கடி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே கொசு தடுப்பு மிக முக்கியமானதாகும். முடிந்தவரை, கொசு வலையின் கீழ் குழந்தைகளை வைத்திருக்கலாம். மேலும், குழந்தைகளின் உடல் முழுவதும் துணியால் மூடியவாறு வைக்கலாம். எனினும், குழந்தைகளுக்கு கொசு விரட்டும் பொருள்கள் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில், கொசு விரட்டும் பொருள்களில் கடுமையான இரசாயனங்கள் இருக்கலாம். இவை குழந்தைகளைப் பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்கள் : இந்த 5 டயப்பர் விதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
இலகுவான, வசதியான ஆடைகள்
மழைக்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்றே. சில நேரங்களில் அதிக மழை பெய்யலாம். மற்ற நேரங்களில் ஈரப்பதம் அல்லது வெயில் காலநிலை ஏற்படலாம். எனினும், காலநிலைக்கு ஏற்பவாறு, குழந்தைகளின் ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. எனவே அவர்களுக்கு நல்ல வசதியான ஆடைகளை அணிய வைப்பது சிறந்தது. குறிப்பாக பருத்தி ஆடைகள் குழந்தைளுக்கு மழைக்காலங்களில் பொருத்தமானதாக அமையும். இவை குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுப்பதுடன், எளிதில் சுவாசிக்கக் கூடியதாகவும் அமைகின்றன. குளிர்ச்சியான காலநிலையாக இருப்பின், இலகுவான கம்பளி ஆடைகளை அணிவிக்கலாம்.